search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் மாசு"

    • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள்.

    பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள்.

    இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

    உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா 4-ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளது.

    உலக பெருங்கடல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 8-ம் தேதி உலகில் உள்ள கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்க்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. #WorldOceansDay
    புதுடெல்லி:

    உலகக் பெருங்கடல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 8 தேதி அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் மூன்றில் ஒரு பகுதி கடல் நீர் ஆக்கிரமித்துள்ளது. அது நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல், நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய் பொழிந்து செழிக்க செய்கிறது.

    கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது. மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது.


    சில சமூகதினரின் வாழ்வாதாரம் கடலைசார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தே வைதுள்ளது. இத்தகைய கடலை பாதுகாப்பதற்காகவும், அதனை கவுரவிக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் உலக பெருங்கடல் நாள் கொண்டாடப்படுகிறது.

    கடல்களில் பிளாஸ்டிக் குப்பையைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஆண்டின் மையப்பொருளாக உள்ளது. நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு கழிவு கடலில் கலக்கிறது. இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. நுண் உயிரினங்களும், சிதையாத பிளாஸ்டிக் பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் பிளாஸ்டிக் புகுந்துவிடுகிறது.

    இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டு பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம், ஆரோக்கியமான கடலை உருவாக்கும் வழியினை கண்டறிவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலகம் முழுவதும் இன்று பெருங்கடல் நாள் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கடல் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். அது மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. #WorldOceansDay

    ×